Pages

October 13, 2011

Shani Bhagwan slokams

Image coutesy : google search


நவக்ரஹ பகவானகளில் "ஈஸ்வரன்" (சனி + ஈஸ்வரன் = சனீஸ்வரன்) என அழைக்கபடுபவர் சனி பகவான். ஒவ்வொரு   மனிதனின் வாழ்க்கையிலும்  மூன்று முறை 7 1/2 ஆண்டுகள், சனிபகவான் ஒருவரது ராசியில் ஆட்சி செய்கிறார். வாழ்க்கையின் பாடத்தை நமக்கு புகட்டி நம்மை செப்பனிட்டு புடம்போட்டு  மெருகேற்றும்   நல்லாசான். தம்மை முழு நம்பிக்கையுடன் வழிபடுபவர்களுக்கு வாரி கொடுக்கும் கருணைக்கடல், சனீஸ்வரர்.   மற்ற தெய்வங்களைப் போலவே தனது பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர். சங்கடங்களை ஏற்படுத்தினாலும் இறுதியில் நல்லருள் பொழிவார்.

சனிக்கிழமைகளில் எள்ளோதரை (எள் சாதம்) செய்து நிவேதித்து ஏழைகளுக்கு கொடுக்கலாம். அவர்களது மனம் குளிர மங்களம் பெருகும். சனிக்கிழமைகளில் நவக்ரஹ சன்னதியில் எள்கிழியை திரியாக்கி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுதல் உகந்தது.

வரும் சங்கடங்களுக்கு நமது கர்மபலனே காரணம். "நல்லது செய்யின் நல்லது நடக்கும்", "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்",  "தன வினை தன்னை சுடும்". ஆன்றோர் வாக்கு சத்திய வாக்கு. எனவே நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம். சனீஸ்வர பகவானின் அருளை பெறுவோம்.

-----------------------------------------------------------
ஸ்லோகங்கள் :-

சூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ ஸிவப்ரிய :
தீர்க்கசார : பிரசந்நாத்மா பீடாம் ஹரதுமே ஸனி :

------

சங்கடங் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் போங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம்  வாழ இன்னருள் தா தா

---------

கோரிய உலகத் தின்கண் குலவிய உயிர்கட்கெல்லாம்
மீறிடச் சுகமளித்து மெய்த்தளர் பிணியை நீக்கிச்
சீறிய துன்பந் தீர்ந்து சிறக்கத்தீர்க் காயுள் நல்கும்
காரியின் கமல பாதக் கடிமலர் தலைக்கொள் வோமே

-----------

திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் (சனிபகவான் பிடியிலிருந்து விடுபட)

போகமார்த்த பூண்முலையாள்
தன்னோடும் பொன்னகலப்
பாகமார்த்த பைங்கன் - வெள்ளேற்று
அண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையான்
கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான்
மேயது நள்ளாறே!

--------


ஸ்ரீ வியாசர் அருளியது

நீலாஞ்சன சமாபாசம் ராவிப் புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனீஸ்வரம்

-------
சனீஸ்வரர் காயத்ரி

சனைச்சராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி
தந்நோ மந்தப் ப்ரசோதயாத்


காகத்வஜாய  வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தப் ப்ரசோதயாத்


--------------------------------------------------

சனீஸ்வரர் ஸ்லோகம்

நீலம்பரோ நீலவபு : கிரீடி
க்ருத்ரஸ்தித : தராஸக  ரோ தநுஷ்மான்
சதுர்புஜ : சூர்யசுப்ரஸாந்த :
ஸதாஸ்து மஹ்யம் வரத : பிரஸன்ன  :


 ----------------------------------------------------------------------------------------------

Among the nine planets called Navagraha, only Shani Bhagwan (Saturn) has the suffix "Eshwar" in his name [Saneeshwar]. In evey man's life, he rules the rashi 3 time and each time for a period of 7 1/2 years. He gives trouble as well as pours his blessings.

The trouble comes to one as a result of the fruit of one's karma. So if we do good, our sufferings will be minimised or erased. Shani Bhagwan is only doing his duty like Yama Dharmaraja and he is so kind hearted that if we do good, he appreciates it and with our prayers, lessen the bad impacts in our life.  It is also said that "No one can stop shani bhagvan if he is giving his blessings to us"!

Shanibhagwan always blesses his devotees.  No need to fear him or worry about his arrival on a rashi as he is a kind hearted God. When he comes into a Rashi, we have to welcome him and take good care of him as if he has come to our home.

On saturdays, 'Ellodharai' can be prepared and offered to the God and then distributed to the poor. He likes those who help poor and needy. In the navagrah sannadhis in temples, Light lamp with sesame oil with sesame seeds wrapped in a clean white cloth as a wick.

Use sesame oil to light the lamp at home daily.

Pray to Lord Hanuman as it is said that Lord Hanuman once captured Shaneeshwar and made him give a boon that Shaneeshwar will not harm those who prays to hanuman.

Worshipping Lord Ganesha and Lord Shiva is also very good.

Having oil bath by applying sesame oil on the head on Saturdays is also considered to be good.

Slokas :

sangadam theerkkum sani bagawaane
mangalam ponga manam vaitharulvaai
sacharavindri saagaa neriyil
ijjagam vaazha innarul thaa thaa

Sooryaputro dheergadeho visaalaaksha sivah priya :
dheerkaachaara prasannaathma peetam harathume sani :


This verse was sung by Thirungyana sambandhar


Pogamaartha poonmulayaal
thannodum ponnagalap
paagamaartha paingan - velleytru
annal parameti
aagamaartha tholudayaan
kovana aadayinmel
naagamaartha namperumaan
meyadhu nallaare!


Verse by vedavyas

neelaanjana samabhaasam raviputhram yamaagrajam
chhaayaa maarthaanda sambootham tham namaami saneeswaram

Shaneeshwar Gayathris


Sanaicharaya vidhmahe Chhaya putraya dheemahe
Thanno mandha Prachodayaath

kaaka dhwajaaya vidhmahe khadga hastaaya dheemahi
thanno mandha prachodayaath