Pages

March 22, 2012

திருவிளக்கு அகவல்



விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
ஜோதி மணிவிளக்கே ஸ்ரீதேவி பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாக்ஷி தாயாரே
பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சுத்திரிபோட்டு
குளம்போல எண்ணெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க
மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா
பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா
கொட்டகை நிறைய குதிரைகளைத் தாருமம்மா
புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா
அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா