Pages

September 30, 2011

துளசி ஸ்தோத்ரம்

தினமும் சொல்லி சிறிது நீர் ஊற்றி தொழலாம். தினமும் முடியாதவர்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி துளசியை தொழலாம். மஞ்சள் மற்றும் குங்குமத்தை துளசியின் தண்டில் வைத்து, பூவைத்தும் வழிபடலாம்.

ஸ்ரீமத் துளசியம்மா, திருவே கல்யாணி அம்மா
வெள்ளிக் கிழமைதன்னில் விளங்குகின்ற மாதாவே
செவ்வாய்க் கிழமைதன்னில் செழிக்க வந்த செந்திருவே
தாயாரே உந்தன் தாளினை நான் பணிந்தேன்

பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே
ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே
அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே
வனமாலை எனும் மறுவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே

அன்புடனே நல்ல அருந்துளசிக் கொண்டுவந்து
மண்ணின்மேல்  நட்டு மகிழ்ந்த நல்  நீரூற்றி
முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு
செங்காவி சுற்றுமிட்டு திருவிளக்கும் ஏற்றிவைத்து
பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில்வைத்து
புஷ்பங்களை சொறிந்துப் பூஜித்தப் பேர்களுக்கு
என்ன பலன் என்று ருஷிகேசர் தான் கேட்க
மங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள்

"மங்களமாய் எனை வைத்து மகிழ்ந்து உபாசித்தவர்கள்
தீவினையைப் போக்கி சிறந்தபலன் நானளிப்பேன்
அரும்பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்
தரிதிரத்தை  நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன்
புத்திரன் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் அளிப்பேன்
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்
கிருஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன்
மும்மூக்ஷுக்கள் பூஜை செய்தால் மோக்ஷபதம் நான் கொடுப்பேன்
கோடி காராம்பசுவை கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்கு பொன் அமைத்து குழம்புக்கு வெள்ளிக் கட்டி
கங்கைக்கரை தன்னில் கிரகண புண்யக்  காலத்தில்
வாலுருவி அந்தணர்க்கு மஹா தானம் செய்த பலன் நானளிப்பேன்
சத்யம்" என்று நாயகியும் சொல்லலுமே
அப்படியே ஆகுமென திருமால் அறிக்கை இட்டார்

இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்
அற்புதமாய் வாழ்ந்திடிவார் பரதேவி தன் அருளால்

No comments:

Post a Comment

Thank You Very Much for taking time to come here and adding your comment! It means a lot to me! :)