Pages

March 23, 2012

விலை ஏற்றம் விஷ ஏற்றம்

This I wrote last year when the onion prices & fuel prices went up. sharing with you now.

வரம் வாங்காமல் தொட்டதெல்லாம் பொன்னாகின்றன
ஜொலிக்கவில்லை தங்கம்போல் என்றாலும்
அனைத்தையுமே தங்கமாகி பார்க்க
நாட்டை சூறையாடும் நாயகர்களுக்கு ஆசை - அதற்க்கு
விலை ஏற்றம் தான் வழி என நினைத்தால்
ஏழைக்கும் எட்டாது தோசை
வாயுவும் வயிற்றெரிச்சலும் தான் மிஞ்சும்
'தலை வலி தனக்கு வந்தால் தான்' தெரியும்!
நாயகனாய் மிளிர வேண்டியவரே - நீங்கள்
ஏன் வில்லனாய் மாறி உயிரை எடுக்குறீர்கள்?
நித்தம் சமயலறையில் 'எரிவாயு' அடுப்போடு
நம் வயிற்றையும் சேரத்தன்றோ எரிக்கிறது விலையேறி
மின்சாரம், உணவு பண்டம், மருத்துவம், கல்வி என
எல்லாமே எட்டாக் கனியாய் பழுத்துக்கொண்டு இருக்கிறது
தன் உழைப்பின் ஊதியத்தை என்ன வென அறியாது
அடுத்தவரின் சட்டைப் பயில் கைவிட்டே வாழ்ந்துவிட்டார்
கட்டுவோம் மூட்டை அடைவோம் அரசியல் நடத்துபவர் வீட்டை
தலை வலி என்ன வென காட்டுவோம்
வீட்டுச் செலவுகளை அவர்கள் தலையில் கட்டி

(False publicity has now become a tool for fame which even our politicians have started to practice They do all the scams & emerge victoriously like a hero with a forged clean chit!)

2 comments:

  1. //'தலை வலி தனக்கு வந்தால் தான்' தெரியும்!//

    மிகச்சரியான வார்த்தைகள்.

    ReplyDelete

Thank You Very Much for taking time to come here and adding your comment! It means a lot to me! :)