Loka Samastha Sukhino Bhavanthu!

Loka Samastha Sukhino Bhavanthu!

WELCOME :-)

warm WELCOME to my Hobby Lounge.
Just Recline, Relax smiley and Enjoy a "Good Time" @ My Hobby Lounge smiley

SEARCH

Showing posts with label உள்ளத்திலிருந்து ஒரு கவிதை. Show all posts
Showing posts with label உள்ளத்திலிருந்து ஒரு கவிதை. Show all posts

March 23, 2012

விலை ஏற்றம் விஷ ஏற்றம்

This I wrote last year when the onion prices & fuel prices went up. sharing with you now.

வரம் வாங்காமல் தொட்டதெல்லாம் பொன்னாகின்றன
ஜொலிக்கவில்லை தங்கம்போல் என்றாலும்
அனைத்தையுமே தங்கமாகி பார்க்க
நாட்டை சூறையாடும் நாயகர்களுக்கு ஆசை - அதற்க்கு
விலை ஏற்றம் தான் வழி என நினைத்தால்
ஏழைக்கும் எட்டாது தோசை
வாயுவும் வயிற்றெரிச்சலும் தான் மிஞ்சும்
'தலை வலி தனக்கு வந்தால் தான்' தெரியும்!
நாயகனாய் மிளிர வேண்டியவரே - நீங்கள்
ஏன் வில்லனாய் மாறி உயிரை எடுக்குறீர்கள்?
நித்தம் சமயலறையில் 'எரிவாயு' அடுப்போடு
நம் வயிற்றையும் சேரத்தன்றோ எரிக்கிறது விலையேறி
மின்சாரம், உணவு பண்டம், மருத்துவம், கல்வி என
எல்லாமே எட்டாக் கனியாய் பழுத்துக்கொண்டு இருக்கிறது
தன் உழைப்பின் ஊதியத்தை என்ன வென அறியாது
அடுத்தவரின் சட்டைப் பயில் கைவிட்டே வாழ்ந்துவிட்டார்
கட்டுவோம் மூட்டை அடைவோம் அரசியல் நடத்துபவர் வீட்டை
தலை வலி என்ன வென காட்டுவோம்
வீட்டுச் செலவுகளை அவர்கள் தலையில் கட்டி

(False publicity has now become a tool for fame which even our politicians have started to practice They do all the scams & emerge victoriously like a hero with a forged clean chit!)

January 20, 2012

கரியாகும் காசு

ஒவ்வொரு தீபாவளிக்கும்
குப்பைக்கோலம் பூண்ட தெருக்கள்
சிலரின் சந்தோஷம்  பட்டாசினுள்ளிருந்து
கறியும் புகையுமாய் தெருவில்

மறுநாள் கூட்டும் துப்புரவு தொழிலாளன்
கரியாகி கிடக்கும் காசைக் காண
மனம் கனத்து விழியை நனைத்தது 
படிப்பைத் தொடரமுடியாதேங்கும் மகனை நினைத்து

January 11, 2012

எந்த இலக்கை நோக்கி?

புனிதமாய் தொடங்கிய பயணம்
கள்வரால் கவரமுடியா கல்வி
பள்ளி என்னும் கடைகளில்
சொப்பனமாய் விற்பனைக்கு
பகல் கொள்ளையர்களால் சிலருக்கு எட்டாக் கனியானது
சுகமான கல்வி சுமையானது
இளம்பருவம் போட்டியினால் புதைந்துபோனது
ஆடும் தெய்வம் வகுப்பறையில் சிலையானது
பாடும் தெய்வம் மனப்பாடத்தில்  மூழ்கிப் போனது

May 21, 2011

எருமை


எருமை என எளிதாய் திட்டுவது வழக்கம் ஆனால் அந்த எருமையும் பயன் தரும் பெருமையான உயிரினம். 

எருமை
 எருமைக்கும் உண்டு பெருமை  cow
சத்தான கொழுப்பு பால் தரும் அருமை
அதில் கிடைக்கும் 'லஸ்ஸியின்' குளுமை
எல்லாருக்கும் படிபினையாகும் அதன் 'பொறுமை'
அறியமால் எருமை வசைபாடுவது smiley எளிமை smiley4995.gif

April 20, 2011

என் அழகு நீல வானம்


அந்தம் இல்லாதது ஆதியும் தெரியாதது
விரிந்த நீல வானம் முதுமை இல்லாதது
என்று பார்த்தாலும் அன்று பிறந்ததுபோல்
பல அழகை தன்னுள் அடக்கி
பார்பவர்க்கு  அள்ளித் தூவும்
விந்தைக்கு குறைவில்லாதது!

April 7, 2011

பழையது

அவர்களுக்கு பழையது பிடிக்கும்.....
பழைய சாதத்தின் நீராகாரம் -
உடலுக்கு நல்லதாம்
பழைய வெங்காய சாம்பார் -
நாக்குக்கு ருசியாம்
பழைய இட்லியின் உப்புமா - 
காலை சிற்றுண்டி எளிதாக
 பழைய பாடல்கள் -
அமைதியாய் உறக்கம் தழுவ
பழைய கதைகள் -
குழந்தைகள் கேட்க
பழைய நினைவுகள் -
மனதை வருடி சுகம் தர
பழைய நகைகள் -
மற்றவரின் கண்ணை கவர
பழைய மர பர்னிச்சர்கள் -
வீட்டை அழகுபடுத்த
அழகும் குன்றி நலமும் குன்றியது
கால்கள் தளர்ந்தது
கை கொடுத்த கைக்கு இன்று
நடுக்கம் வந்தது
கண்ணின் ஒளி மங்கியது
ஓய்வூதியமும் இல்லை உற்றதுணையும் பிரிந்திட  
 நானும் பழயதானேன்  - என்னைப் போற்ற ஆளில்லை  
இதோ என்னைபோன்றோர் குவிக்கப்பட்ட
அந்தக்குவியலுக்குள்  நானும்
இறங்கும் இடம்  எதிர்பார்த்து காத்திருக்கேன்  
விடைகொடுத்து அனுப்பிவைக்க
புதிய சொந்தங்களின்  சுற்றத்தோடு
எழுதிய மையின்  ஈரம் விழிகளின் ஓரம்.........
 எழுதுகோல் கை நழுவ, பெருமூச்சில் தலைசாய்ந்து
எழுதிய இறுதிக்  கவிதையை முத்தமிட்டபடி 
இறங்கும் இடத்திலிருந்து தொடர்கிறது அவரின் புதுப்பயணம் -
யாரும் கண்டிராத சொர்கத்தை நோக்கி
துணை இல்லாப்  புதுப்பயணம் - ஒரு புனிதப் பயணம்

January 30, 2011

பகல் நேர சிற்றரசு

(ராத்திரி ராஜாவின் கவி கேட்டு பகல் நேர சிற்றரசான புறா சொன்ன பதில்)

 ராத்திரியின் ராஜா நீ என அறிவேன் நான் நன்றாய்
பகல் பொழுது எனதுமென்று இறைவன் விதி அன்றோ?
உன்வீட்டில் சாணம் போட ஆசை ஒன்றும் இல்லை
மனிதர் 2g - cwaig ஊழலைவிட வெட்க செயல் உண்டோ?
தீனி போட்ட வீட்டிற்கே துரோஹம் செய்யும் செயலை
செய்தவர் புன்சிரிக்க நான் தலை கவிழ்தல் இல்லை
அவரவர் சுதந்திரத்தை அவரவர் வீட்டில் வைத்தல் நன்று
பகல் பொழுது உன் திண்ணை என் வீடும் அன்றோ?
அண்டை வீட்டார் சண்டைபோட்டால் ஊருக்கு கொண்டாட்டம்
ஆந்தை அண்ணனே நீ இரவில் கத்தும் சத்தம் எனக்கு திண்டாட்டம்
தொந்தரவு செய நினைக்கவில்லை அங்ஙனம் என் படைப்பு அன்றோ?பகலில் நானும் இரவில் நீயும் கத்த மீராவின் தூக்கம் போனது அன்றோ?நம்முடைய அன்பு தோழிகூட நம்மை வைவதில்லை
அதுபோலே கோள் சொல்லாமல் நாமும் சகித்து வாழ்வோம்
ராத்திரியில் ஆட்சி செய்ய ஊரெங்கும் பறந்தாய்
பகல் நேரம் சிற்றரசாய் உன் திண்ணையில் நின்றேன்
pigeon 

January 29, 2011

ராத்திரி ராஜா

Owlராத்திரி ராஜாsmiley


(புறாவின் பகல் ரகளை பற்றி ஆந்தை பாடும் பாட்டு)

வாசல் வந்து என்னை கத்தி மிரட்டுகிராயோ?
மூர்த்தி சிறிது கீர்த்தியும் சிறிது அறியாமல் - எந்தன்
வாசல் உனக்கே சொந்தம் என்று பெருத்து நின்றாயோ?
சகிப்புத்தன்மை அதிகம் என அறிந்து எந்தன் வாசலிலே
சாணம் போட்டு மெழுகி வைத்து துர்நாற்றம் தந்தாயோ?
பகல் நேரம் உனதென்று ஆட்டம்போட்டு ஊரைக்கூட்டும் மடப்புறாவே
இருள் சூழ்ந்த "இரவுகளின் ராஜா" நான்தானே
உன்தூக்கம் என்கையில் என்பதை மறந்து விட்டாயோ?   smiley

பெருத்து = புறா மற்றவரை பயமுறுத்த உடலை பருமனாக காட்டும்.

Pigeons are messy eaters. they eat & they let their droppings in the same place, unlike the other birds. I have many winged visitors at my place during day & night. THe pigeons occupy the Owl's nesting place during the day & made the place very messy. Whereas in the nights, the owls rule the world hence pigeons cannot be seen outside as they quitely hide into the night.
பகல் நேரம் கண்பார்வை மங்கல் என அறிந்து - எந்தன்

Your Kind Attention Please :-)

Thank you for paying a visit to My Hobby Lounge to view "Mira's Talent Gallery"

If you like My Hobby Lounge you can motivate by "Liking", "Sharing", "Tweeting", "Voting", "Following" "commenting" :-)

To get the latest updations, "subscribe" using your e-mail ID

Use "search" option for things you are looking for in My Talent Gallery.

Cookbook is given in dropdown list form for your convenience. You will find it on the right side column. Wish you a great time :-)